செய்திகள் (Tamil News)

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியாவின் சாதனையை உடைத்தெறிந்தது இங்கிலாந்து

Published On 2019-06-08 13:48 GMT   |   Update On 2019-06-08 13:48 GMT
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக அதிகமுறை 300 ரன்களை கடந்த அணிகள் சாதனையில் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளியது இங்கிலாந்து.
இங்கிலாந்து அணி கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்குப்பின் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக சொந்த மைதானத்தில் அதிரடியாக ரன்கள் குவித்து வருகிறது. இதனால் சொந்த மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பையை அந்த அணி வெல்லுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 311 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ஆட்டத்தில் 334 ரன்கள் சேர்த்து தோல்வியைத் தழுவியது. இன்று வங்காள தேசத்திற்கு எதிராக 386 ரன்கள் குவித்துள்ளது. ஏற்கனவே ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான நான்கு போட்டிகளில் தொடர்ச்சியாக 300 ரன்களுக்கு மேல் குவித்தது.



இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 7 முறை தொடர்ச்சியாக 300 ரன்களுக்கு மேல் குவித்த ஒரே அணி என்ற சாதனையை இங்கிலாந்து படைத்துள்ளது. இதற்கு முன் ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக 6 முறைக்கு மேல் 300 ரன்கள் அடித்து சாதனை புரிந்திருந்தது. தற்போது அதை இங்கிலாந்து முறியடித்துள்ளது.

Similar News