புதுச்சேரி

கடலூர்-புதுவை சாலை பிள்ளையார்குப்பம் பகுதியில் தண்ணீர் தேங்கி இருப்பதால் ஊர்ந்து செல்லும் வாகனங்களை படத்தில் காணலாம்.

வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்

Published On 2023-11-26 07:37 GMT   |   Update On 2023-11-26 07:37 GMT
  • பாகூர் பகுதியில் ஏரி, தாங்கள் போன்ற 24 நீர்நிலைகள் உள்ளது
  • 100 கி.மீ. நீளத்திற்கு வாய்க்கால்களை பொதுப்பணித்துறையினர் பராமரித்து வருகின்றனர்.

புதுச்சேரி:

பாகூர் பகுதியில் ஏரி, தாங்கள் போன்ற 24 நீர்நிலைகள் உள்ளது. இவைகளுக்கான நீர்வரத்து, நீர் போக்கு வாய்கால் என சுமார் 100 கி.மீ. நீளத்திற்கு வாய்க்கால்களை பொதுப்பணித்துறையினர் பராமரித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாகூர், பிள்ளையார்குப்பம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதியில் வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டு மூடி மறைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் அனுமதியின்றி வாய்க்கால்களின் குறுக்கே பாலங்களும் தடுப்புகளும் அமைத்துள்ளனர்.

இதனால் பேரிடர் காலங்களில் மழைநீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளிலும் வயல்வெளி பகுதியில் தண்ணீர் தேங்கி நின்று பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

நேற்று இரவு பெய்த கனமழையால் பிள்ளையார்குப்பம் - பாகூர் சாலையில், தனியார் மருத்துவ கல்லூரி அருகே சுமார் 200 மீட்டர் நீளத்திற்கு தண்ணீர் சாலையிலேயே தேங்கி நிற்கிறது. அவ்வழியே வாகனங்கள் நீந்தி செல்கின்றன.

Tags:    

Similar News