டூயல் பேண்ட் ஜிபிஎஸ் மற்றும் AMOLED ஸ்கிரீன் கொண்ட அமேஸ்பிட் GTR 4 அறிமுகம்
- அமேஸ்பிட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் ஐந்து விதமான செயற்கைக்கோள் சிஸ்டம்களுடன் தொடர்பு கொள்ளும் திறன் கொண்டுள்ளது.
- இத்துடன் பயோடிராக்கர் 4.0 ஆப்டிக்கல் சென்சார் மற்றும் மேம்பட்ட ஜிபிஎஸ் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
உலகின் பிரபல நுகர்வோர் மின்சாதன கண்காட்சியான 2022 ஐஎப்ஏ விழா இன்று துவங்குகிறது. இதையொட்டி பல்வேறு நிறுவனங்களும் தங்களின் சாதனங்களை அறிமுகம் செய்ய துவங்கி விட்டன. இந்த வரிசையில் தான் அமேஸ்பிட் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் அமேஸ்பிட் GTR 4 என அழைக்கப்படுகிறது.
புதிய அமேஸ்பிட் GTR 4 ஸ்மார்ட்வாட்ச் பயோடிராக்கர் 4.0 PPG ஆப்டிக்கல் சென்சார், ஐந்து செயற்கைக்கோள் சிஸ்டம்களுடன் இணைந்து செயல்படும் ஆற்றல் மிக்க மேம்பட்ட ஜிபிஎஸ் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் அதிகபட்சமாக பத்து ஸ்போர்ட்ஸ் மோட்கள், மேம்பட்ட பிட்னஸ் அம்சங்கள் மற்றும் செப் ஆப் மூலம் கூடுதல் வசதிகள் உள்ளன. GTR 4 மாடலில் அட்வான்ஸ்டு டிராக் ரன் மோட், புதிய கொல்ப் ஸ்விங் மோட், அடிடாஸ் ரன்னிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் ஸ்டார்வா சேவைக்கான சப்போர்ட் அப்டேட் மூலம் விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இதே போன்று செப் ஆப் மூலம் வழித்தடங்களை இம்போர்ட் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் 1.43 இன்ச் AMOLED ஸ்கிரீன், அதிகபட்சம் 14 நாட்களுக்கான பேட்டரி லைஃப், பில்ட் இன் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட் போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது.
அமேஸ்பிட் GTR 4 ஸ்மார்ட்வாட்ச் கிரே, பிளாக் மற்றும் பிரவுன் லெதர் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 200 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 15 ஆயிரத்து 932 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் சர்வதேச வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.