கூகுள் மேப்பின் ஸ்டிரீட் வியூ அம்சம்... சென்னை உள்பட 10 நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது
- கூகுள் ஸ்டிரீட் வியூ அம்சம் தற்போது முதற்கட்டமாக 10 முக்கிய நகரங்களுக்கு மட்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
- இரு தனியார் நிறுவனங்களின் உதவியுடன் இந்தியாவில் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது கூகுள் நிறுவனம்.
கூகுள் மேப் செயலியில் உள்ள ஸ்டிரீட் வியூ அம்சம் தற்போது இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பாதுகாப்பு காரணமாக நீண்ட நாட்களாக செயல்படுத்தப்படாமல் இருந்த இந்த அம்சம் தற்போது முதற்கட்டமாக 10 முக்கிய நகரங்களுக்கு மட்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் மூலம் கூகுள் மேப் செயலியை வைத்து இருபிடத்தின் புகைப்படங்களை 360 டிகிரியில் தெளிவாக காண முடியும்.
வெளிநாடுகளில் இந்த அம்சம் பல ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகம் ஆகிவிட்ட போதும் இந்தியாவில் தற்போது தான் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இரு தனியார் நிறுவனங்களின் உதவியுடன் இந்தியாவில் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது கூகுள் நிறுவனம். இந்த அம்சம் மூலம் உள்ளூர் சாலை அமைப்புகள் மற்றும் போக்குவரத்து தடங்கள் உள்ளிட்டவற்றை அறிந்துகொள்ள முடியும்.
முதற்கட்டமாக இந்தியாவில் உள்ள சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், புனே, நாசிக், அமிர்தசரஸ், வதோதரா, அகமத்நகர் ஆகிய 10 நகரங்களில் இந்த ஸ்டிரீட் வியூ அம்சம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மேற்கண்ட நகரங்களில் உள்ள சுமார் 1.5 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தை இந்த ஸ்டிரீட் வியூ அம்சம் மூலம் புகைப்படங்களாக பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.