கணினி

மிக குறைந்த விலையில் புது இயர்பட்ஸ் அறிமுகம் செய்த மிவி

Published On 2022-09-13 06:16 GMT   |   Update On 2022-09-13 06:16 GMT
  • மிவி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய இயர்பட்ஸ் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.
  • புது இயர்பட்ஸ் மேட் இன் இந்திய திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டவை ஆகும்.

மிவி நிறுவனம் இந்தியாவில் டுயோபாட்ஸ் M30 மற்றும் காலர் பிளாஷ் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இரு சாதனங்களும் மிவி நிறுவனத்தின் மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டவை ஆகும். மிவி டுயோபாட்ஸ் A550, F70 மற்றும் காலர் கிளாசிக் ப்ரோ போன்ற மாடல்களும் அறிமுகமாகி இருக்கின்றன.

புதிய டுயோபாட்ஸ் மாடலில் உள்ள 10.5 எம்எம் டிரைவர்கள் தரமான சவுண்ட் வழங்குகிறது. இத்துடன் இதன் இயர்பட் ஒவ்வொன்றிலும் 35 எம்ஏஹெச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளன. சார்ஜிங் கேசில் 380 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் மைக்ரோ யுஎஸ்பி சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இதை கொண்டு 42 மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும்.


காலர் பிளாஷ் ப்ரோவில் உள்ள 13 எம்எம் டிரைவர் சிறப்பான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. நெக்பேண்ட் 250 மணி நேரம் வரை ஆன் செய்யப்பட்டு இருக்கலாம். இதன் இயர்பட்களில் 190 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. காலர் உடன் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் கேபிள் வழங்கப்படுகிறது. காலர் கிளாசிக் ப்ரோ- பிளாக், புளூ, கிரீன், கிரே மற்றும் ரெட் என ஐந்து விதமான நிறங்களில் கிடைக்கிறது.

இரு இயர்போன்களிலும் ப்ளூடூத் 5.1 வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு 30 மீட்டர்கள் வரை தொலைவில் இருக்கும் சாதனங்களையும் இணைக்கலாம். இத்துடன் PNC நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. மிவி டுயோபாட்ஸ் M30 மாடல்- பிளாக், புளூ, பெய்க் மற்றும் பின்க் நிறங்களில் கிடைக்கிறது.

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

மிவி டுயோபாட்ஸ் அறிமுக சலுகையாக ரூ. 999 விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது. மிவி காலர் பிளாஷ் ப்ரோ மாடலும் ரூ. 999 எனும் விலையில் வஇற்பனை செய்யப்பட உள்ளன. இந்த விலை அக்டோபர் 20 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். அதன் பின் இரு இயர்போன்களின் விலை ரூ. 2 ஆயிரத்து 999 என மாறி விடும். இரு இயர்போன்களும் மிவி அதிகாரப்பூர்வ வலைதளத்திலும் விற்பனைக்கு கிடைக்கும்.

Tags:    

Similar News