கணினி

340 வாட் டவர் ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்த ஜெப்ரானிக்ஸ்

Published On 2022-08-27 05:01 GMT   |   Update On 2022-08-27 05:01 GMT
  • ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய டவர் ஸ்பீக்கர் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
  • இந்த ஸ்பீக்கருடன் நான்கு இக்வலைசர் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஜெப்ரானிக்ஸ் இந்தியா நிறுவனம் ஜெப் ஆக்டேவ் பெயரில் சக்திவாய்ந்த 340 வாட் டவர் ஸ்பீக்கர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. டவர் ஸ்பீக்கரில் டால்பி தொழில்நுட்பம் பயன்படுத்தி இருக்கும் முதல் இந்திய பிராண்டு என்ற பெருமையை ஜெப்ரானிக்ஸ் பெற்று உள்ளது. சமீபத்தில் தான் ஜெப்ரானிக்ஸ் ஜெப் ஜூக் பார் 4050 75 வாட் சவுண்ட்பார் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய ஜெப் ஆக்டேவ் ஸ்பீக்கரில் 3-வே, 340 வாட் அவுட்புட் உள்ளது. இது தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. இதில் அழகிய பிளாக் மற்றும் கோல்டு கேஸ், டச் கண்ட்ரோல்கள் மற்றும் எல்இடி ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இது டால்பி மற்றும் விர்ச்சுவல் 3டி வசதிகளை கொண்டுள்ளது.


இதில் உள்ள ட்வீட்டர்கள், டபுல்-மிட்ரேன்ஜ் டிரைவர்கள் மற்றும் சக்திவாய்ந்த சப்-வூபர்கள் சிறப்பான சவுண்ட் வழங்குகிறது. இந்த டவர் ஸ்பீக்கரில் இரண்டு வயர்லெஸ் மைக்குகளை இணைத்துக் கொள்ளும் வசதி உள்ளது. இத்துடன் ரிமோட் கண்ட்ரோல், நான்கு இக்வலைசர் ஆப்ஷ்கள் உள்ளது. இதை கொண்டு பயனர்கள் ஸ்பீக்கர்களை அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்.

இந்திய சந்தையில் புதிய ஜெப் ஆக்டேவ் மாடலின் விலை ரூ. 24 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ஜெப்ரானிக்ஸ் வலைதளத்தில் நடைபெறுகிறது.

Tags:    

Similar News