மொபைல்ஸ்

ஹானர் 200 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம்

Published On 2024-07-01 15:40 GMT   |   Update On 2024-07-01 15:40 GMT
  • ஹானர் 200 16GB ரேம் வரையிலும், 512GB இன்டர்னர் ஸ்டோரேஜ் கொண்டதாகவும் வெளியாக உள்ளது.
  • ஹானர் 200 ப்ரோ 15GB ரேம் வரை சப்போர்ட் செய்வதாகவும், 1TB இன்டர்னெல் ஸ்டோரோக் கொண்டதாகவும் இருக்கும்.

ஹானர் ஸ்மார்ட்போன் நிறுவனம் விரைவில் ஹானர் 200 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் வெளியிட இருக்கிறது. இதற்கான தகவல்களை அமேசான் ஆன்லைன் நிறுவன இணைய தளத்தில் வெளியாகியுள்ளது. ஆனால் ரிலீஸ் ஆகும் தேதி வெளியிடப்படவில்லை.

ஹானர் 200 மற்றும் ஹானர் 200 ப்ரோ என இரண்டு சீரிஸில் வெளியாக உள்ளது. ஹானர் 200 ஸ்னாப்டிராகன் 5 ஜெனரேசன் 3 பிராசசரை கொண்டதாகவும், ஹானர் ப்ரோ ஸ்னாப்டிராகன் 5 ஜெனரேசன் 3 பிராசசரை கொண்டதாகவும் இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

6.7 இன்ச் Full HD+ கர்வ்டு OLED டிஸ்பிளே கொண்டதாகவும், ரிசொலுசன் 2664X1200 பிக்சல்ஸ் அண்டு ஸ்மூத் விசுவலுக்கான 120Hz ரெஃப்ரெஸ் ரேட் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரைட்நெஸ் 4 ஆயிரம் நிட்ஸ்க்கு அதிகமாக கொண்டதாகவும் இருக்கும் எனவும் தெரிகிறது.

ஹானர் 200 16GB ரேம் வரையிலும், 512GB இன்டர்னர் ஸ்டோரேஜ் கொண்டதாகவும் வெளியாக உள்ளது.

ஹானர் 200 ப்ரோ 15GB ரேம் வரை சப்போர்ட் செய்வதாகவும், 1TB இன்டர்னெல் ஸ்டோரோக் கொண்டதாகவும் இருக்கும்.

5200 mAh பேட்டரி கொண்டதாக இருக்கும் நிலையில் 100W பார்ஸ்ட் சார்ஜிங் மற்றும் 66W வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளை கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான மேஜிக் OS 8.0-ஐ கொண்டது. இரண்டு சிம்கார்டு பயன்படுத்தலாம். 5ஜி வசதி கொண்டதாகும்.

Tags:    

Similar News