ஜியோ, ஏர்டெல் கட்டண உயர்வுக்கு மத்தியில் விலையை குறைத்த பிஎஸ்என்எல்
- பிஎஸ்என்எல் ரூ.249க்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
- இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற இலவச அழைப்பு.
ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தங்களது செல்போன் ரீசார்ஜ் சேவை கட்டணத்தை அதிரடியாக உயர்த்திய நிலையில், பிஎஸ்என்எல் ரீசார்ஜ் கட்டணத்தை குறைத்து புதிய பிளானை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பிஎஸ்என்எல் ரூ.249க்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது, ஜியோ, ஏர்டெல் போன்ற தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் கட்டண உயர்வுக்கு மத்தியில், பிஎஸ்என்எல் விலையை குறைத்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு நிவாரணமாக உள்ளது.
அதன் நீட்டிக்கப்பட்ட வேலிடிட்டி, வரம்பற்ற அழைப்பு மற்றும் தாராளமான டேட்டா அலவன்ஸ் ஆகியவற்றுடன், அதிக மதிப்பு மற்றும் குறைந்த செலவை எதிர்பார்க்கும் பயனர்களை ஈர்க்கும் வகையில் இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக தங்கள் கட்டணங்களின் விலையை சுமார் 26 சதவீதம் உயர்த்தியுள்ளது. இது வரும் ஜூலை 3, 4ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ஜியோ மற்றும் ஏர்டெல்: விலை உயர்வுகள் ஜூலை 3, 2024 முதல் அமலுக்கு வருகிறது.
வோடபோன் ஐடியா: புதிய விலைகள் ஜூலை 4, 2024 முதல் அமலுக்கு வருகிறது.
பிஎஸ்என்எல் திட்டத்தின் சலுகை பற்றிய விவரங்கள் இதோ:
புதிய திட்டம் 45 நாட்களுக்கு நீடிக்கும். இது வழக்கமான திட்டங்களை விட நீண்டது.
இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற இலவச அழைப்பு.
மொத்தம் 90ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 2ஜிபிக்கு சமம்.
ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்.
இத்தகைய விரிவான திட்டத்தை குறைந்த விலையில் வழங்குவதற்கான பிஎஸ்என்எல்-ன் நடவடிக்கை சிறந்த மதிப்பை வழங்கும் அதே வேளையில், பயனர்கள் மீதான நிதிச்சுமையை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.