மொபைல்ஸ்

ரியல்மி GT 6 இந்தியாவில் அறிமுகம்: 40,999 ரூபாயில் இருந்து விலை ஆரம்பம்

Published On 2024-06-20 12:14 GMT   |   Update On 2024-06-20 12:14 GMT
  • ரியல்மி GT 6 ஸ்மார்ட்போனை ஜூன் 24 வரை பிளிப்கார்ட் இணையதளங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
  • இந்த ஸ்மார்ட்போன் 5500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

ரியல்மி நிறுவனம் தனது GT 6 ஸ்மார்ட்போனினை இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இது குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 3 பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போனாகும்.

விலை விவரங்கள்:

ரியல்மி GT 6 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி ரூ. 40,999

ரியல்மி GT 6 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி ரூ. 42,999

ரியல்மி GT 6 16 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி ரூ. 44,999

இந்த ரியல்மி GT 6 ஸ்மார்ட்போனை ஜூன் 24 வரை ரியல்மி மற்றும் பிளிப்கார்ட் இணையதளங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஜூன் 25 முதல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது.

புதிய ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஐ.சி.ஐ.சி.ஐ, ஹெ.ச்.டி.எஃ.ப்.சி மற்றும் எஸ்.பி.ஐ வங்கி அட்டைகள் மூலம் ரூ. 4 ஆயிரம் வரையிலான தள்ளுபடி பெற முடியும்.

மேலும், இந்த ஸ்மார்ட்போனை வாங்கிய 6 மாதத்தில் மொபைல் ஸ்க்ரீன் உடைந்தால் புது ஸ்க்ரீன் மாற்றி தரப்படும் என்றும் மொபைல் எக்ஸ்சேஞ்ச் செய்தால் 1000 வரை தள்ளுபடி கிடைக்கும் என்று ரியல்மி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈ.எம்.ஐ மூலமாகவும் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம். 12 மாதங்கள் ஈ.எம்.ஐ செலுத்த வேண்டியிருக்கும்.

ரியல்மி GT 6 மாடலில் 6.78 இன்ச் HD+ LTPO AMOLED ஸ்கிரீன் கொண்ட ப்ரோ HDR 10+ டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், 6000nits பிரைட்னஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 3 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி, 3D tempered dual VC லேயர் கூலிங் சிஸ்டம், ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ரியல்மி யு.ஐ. 5, 50MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் 5500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 120 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

இதனோடு ரியல்மி Buds Air6 Pro வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 4,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஜூன் 27 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது. இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 40 மணிநேரம் பயன்படுத்தலாம்.

Tags:    

Similar News