புதிய கேஜெட்டுகள்

ஐபோன் 17 சீரிஸ் விவரங்களை வெளியிட்ட ஆப்பிள் வல்லுநர்

Published On 2024-08-30 15:41 GMT   |   Update On 2024-08-30 15:41 GMT
  • ஐபோன் 17 சீரிஸ் விவரங்கள் தற்போதே வெளியாக துவங்கிவிட்டன.
  • ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

ஆப்பிள் நிறுவனம் தனது முற்றிலும் புதிய ஐபோன் மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் பற்றி ஏற்கனவே ஏராளமான தகவல்கள் வெளியான நிலையில், அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஐபோன் 17 சீரிஸ் விவரங்கள் தற்போதே வெளியாக துவங்கிவிட்டன.

அதன்படி ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியூ வெளியிட்டுள்ள தகவல்களில், ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. இது அடுத்த ஆண்டு ஆப்பிள் அறிமுகம் செய்யும் புதிய ஐபோன் சீரிசில் விலை உயர்ந்த மாடலாக இருக்கும்.

புதிய ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலில் அதிகபட்சம் 12 ஜிபி ரேம் வழங்கப்படும் என்று கியூ தெரிவித்துள்ளார். இந்த சீரிசில் அதிகபட்சம் ரேம் கொண்ட ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு அறிமுகமாகும் ஐபோன்கள், மிக மெல்லிய டிசைன் கொண்டிருக்கும். இந்த சீரிசில் ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் SE4 போன்ற மாடல்கள் இடம்பெற்று இருக்கும். இவற்றில் அனைத்து மாடல்களிலும் குறைந்தபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்படும். இத்துடன் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலில் வேப்பர் சாம்பர் கூலிங் சிஸ்டம் வழங்கப்படும் என்று கியூ தெரிவித்தார்.

Tags:    

Similar News