மொபைல்ஸ்
null

ஐபோன் 16 சீரிஸ் போன்கள் அறிமுகம் செய்த ஆப்பிள்

Published On 2024-09-09 21:45 GMT   |   Update On 2024-09-09 22:03 GMT
  • உலக சந்தையில் கணிசமான பங்கை ஐபோன் தனக்கென கொண்டுள்ளது.
  • ஆப்பிள் நிறுவனம் கடந்த 2007-ம் ஆண்டில் முதன் முதலாக ஐபோன் மாடலை அறிமுகம் செய்தது.

மொபைல் போன்களின் உலகில் தனக்கென தனி சந்தையை உருவாக்கி வைத்துள்ள ஆப்பிள் நிறுவனம் தங்களது தனித்துவமான தயாரிப்புகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.

ஆப்பிள் நிறுவனம் கடந்த 2007-ம் ஆண்டில் முதன் முதலாக ஐபோன் மாடலை அறிமுகம் செய்தது. ஸ்மார்ட்போன் வணிகம் சார்ந்த உலக சந்தையில் சுமார் 15 சதவீத பங்கை ஐபோன் கொண்டுள்ளது.


ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் புதிய மாடல் ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டில் ஐபோன் 16 சீரிஸ் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஸ்மார்ட்போன் வணிகம் சார்ந்த உலக சந்தையில் கணிசமான பங்கை ஐபோன் தனக்கென கொண்டுள்ளது. இந்த முறை ஏஐ அம்சங்கள், கேமரா கன்ட்ரோல் பட்டன் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டைப் போலவே, புதிய தலைமுறை ஐபோன்களில் ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய நான்கு மாடல்கள் உள்ளன.


ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ் சிறப்பு அம்சங்கள்

* 6.1 இன்ச் திரை அளவு கொண்டுள்ளது ஐபோன் 16.

* 6.7 இன்ச் திரை அளவு கொண்டுள்ளது ஐபோன் 16 பிளஸ்,

* ஏ18 ப்ராசஸர் இதில் இடம்பெற்றுள்ளது,

* ஐஓஎஸ் 18 இயங்குதளம்.

* 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா.

* 12 மெகாபிக்சல் கொண்ட அல்ட்ரா வொய்ட் கேமராவும் பின்பக்கம் இடம்பெற்றுள்ளது.

* 12 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா.

* டைப்-சி சார்ஜிங் போர்ட்.

* ஐபோன் 16 (128ஜிபி) ரூ.79,900.

* ஐபோன் 16 பிளஸ் (128ஜிபி) ரூ.89,900.

பயனர்கள் சில டாஸ்குகளை எளிதில் மேற்கொள்ளும் வகையில் ஆக்ஷன் பட்டன் இதில் இடம்பெற்றுள்ளது

அதேபோல கேமரா கன்ட்ரோல் பட்டனும் இதில் இடம்பெற்றுள்ளது.


ஐபோன் 16 புரோ, ஐபோன் 16 புரோ மேக்ஸ் சிறப்பு அம்சங்கள்

• ஏ18 புரோ சிப்

• 6.3 இன்ச் திரை அளவு கொண்டுள்ளது ஐபோன் 16 புரோ.

• 6.9 இன்ச் திரை அளவு கொண்டுள்ளது ஐபோன் 16 புரோ மேக்ஸ்.

• 48 மெகாபிக்சல் பிரதான கேமரா.

• 48 மெகாபிக்சல் கொண்ட அல்ட்ரா வொய்ட் கேமரா பின்பக்கம் இடம்பெற்றுள்ளது.

• 12 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா.

• கேமரா கன்ட்ரோல் பட்டன் புரோ மாடல் போன்களிலும் இடம்பெற்றுள்ளது.

• ஐபோன் 16 புரோ போனின் ஆரம்ப விலை ரூ.1,19,900.

• ஐபோன் 16 புரோ மேக்ஸ் போனின் ஆரம்ப விலை ரூ.1,44,900.

வரும் 13-ம் தேதி முதல் புதிய ஐபோன் 16 வரிசை போன்களை முன்பதிவு செய்யலாம். 20-ம் தேதி முதல் பயனர்கள் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News