4ஜி கனெக்டிவிட்டி கொண்ட ஜியோ ஃபீச்சர் போன் இந்தியாவில் அறிமுகம்
- இந்த மொபைல் போன் குவால்காம் பிராசஸர், கை ஓஎஸ் 2.5.3 கொண்டிருக்கிறது.
- இந்த மொபைல் போன் 2000 எம்ஏஹெச் பே்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் ஜியோபோன் பிரைமா 2 மாடலை அறிமுகம் செய்தது. இது 4ஜி பீச்சர் போன் மாடல் ஆகும். அம்சங்களை பொருத்தவரை ஜியோபோன் பிரைமா 2 மாடலில் 2.4 இன்ச் கர்வ்டு ஸ்கிரீன், குவால்காம் பிராசஸர், கை ஓஎஸ் 2.5.3 ஓஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க பிரைமரி கேமரா, செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதில் கூகுள் அசிஸ்டண்ட் வசதி, ஃபேஸ்புக் மற்றும் யூடியூப், ஜியோசாவன், ஜியோடிவி மற்றும் ஜியோசினிமா செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன. இத்துடன் ஜியோபே மூலம் யுபிஐ வசதி வழங்கப்படுகிறது.
ஜியோபோன் பிரைமா 2 மாடலில் எல்இடி டார்ச், ப்ளூடூத், 3.5mm ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ, யுஎஸ்பி 2.0 கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மொபைல் போன் ஜியோ சிம் கார்டு சப்போர்ட் மட்டுமே கொண்டிருக்கிறது. மேலும், இதனை 23 மொழிகளில் இயக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மொபைல் போன் 2000 எம்ஏஹெச் பே்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
இந்திய சந்தையில் ஜியோபோன் பிரைமா 2 மாடலின் விலை ரூ. 2 ஆயிரத்து 799 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் லூக்ஸ் புளூ நிறத்தில் மட்டும் கிடைக்கிறது.