மொபைல்ஸ்

வரும் 9-ம் தேதி வெளியாகிறது ஆப்பிள் ஐ போன் 16 சீரிஸ்

Published On 2024-09-06 15:32 GMT   |   Update On 2024-09-06 15:32 GMT
  • ஆப்பிள் நிறுவனம் கடந்த 2007-ம் ஆண்டில் முதன் முதலாக ஐபோன் மாடலை அறிமுகம் செய்தது.
  • அந்த நிறுவனம் தங்களது தனித்துவமான தயாரிப்புகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.

மொபைல் போன்களின் உலகில் தனக்கென தனி சந்தையை உருவாக்கி வைத்துள்ள ஆப்பிள் நிறுவனம் தங்களது தனித்துவமான தயாரிப்புகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.

ஆப்பிள் நிறுவனம் கடந்த 2007-ம் ஆண்டில் முதன் முதலாக ஐபோன் மாடலை அறிமுகம் செய்தது. ஸ்மார்ட்போன் வணிகம் சார்ந்த உலக சந்தையில் சுமார் 15 சதவீத பங்கை ஐபோன் கொண்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் புதிய மாடல் ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி அன்று குளோடைம் நிகழ்வில் உலகளாவிய சந்தைகளில் ஐபோன் 16 தொடரை ஆப்பிள் அறிமுகப்படுத்துகிறது.

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 வரிசை போன்கள் உள்பட ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் ஏர்பாட் போன்ற சாதனங்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது.

அதாவது, இந்தியாவில் ஐபோன் 16 128 ஜிபி: விலை ரூ. 79,900

ஐபோன் 16 256 ஜிபி : விலை ரூ. 89,900,

ஐபோன் 16 512 ஜிபி 1,09,000 ரூபாய் ஆகும்.

Tags:    

Similar News