டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: மெத்வதேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் அல்காரஸ்

Published On 2024-07-12 15:43 GMT   |   Update On 2024-07-12 15:43 GMT
  • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
  • முதல் அரையிறுதி போட்டியில் மெத்வதேவ் தோல்வி அடைந்தார்.

லண்டன்:

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் அரையிறுதி சுற்றில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் உடன் மோதினார்.

இதில் மெத்வதேவ் 7-6 (7-1) என முதல் செட்டை வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட அல்காரஸ் அடுத்த 3 செட்களை 6-3, 6-4, 6-4 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இதன்மூலம் மெத்வதேவ் விம்பிள்டன் தொடரில் இருந்து வெளியேறினார். நாளை மறுதினம் இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

Tags:    

Similar News