டென்னிஸ்

இந்திய ஜோடி

மகாராஷ்டிர ஓபன் டென்னிஸ் - இந்தியாவின் பாலாஜி, நெடுஞ்செழியன் ஜோடி இறுதிக்கு முன்னேற்றம்

Published On 2023-01-06 18:50 GMT   |   Update On 2023-01-06 18:50 GMT
  • மகாராஷ்டிர ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி நேற்று நடந்தது.
  • இதில் இந்திய ஜோடி 6-4, 7-5 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தை வென்று இறுதிக்குள் நுழைந்தது.

புனே:

5-வது மகாராஷ்டிர ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி நேற்று நடந்தது.

இந்தியாவின் பாலாஜி, நெடுஞ்செழியன் ஜோடி, இங்கிலாந்தின் காஷ், பாட்டேன் ஜோடியை எதிர்கொண்டது.

இதில் இந்திய ஜோடி 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

Tags:    

Similar News