டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் யுகி பாம்ப்ரி ஜோடி தோல்வி

Published On 2024-07-05 15:43 GMT   |   Update On 2024-07-05 15:43 GMT
  • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
  • ஆண்கள் இரட்டையர் பிரிவில் யுகி பாம்ப்ரி ஜோடி தோல்வி அடைந்தது.

லண்டன்:

ஒவ்வொரு ஆண்டும் நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி-பிரான்சின் ஆல்பனோ ஆலிவெட்டி ஜோடி, ஜெர்மனியின் கெவின் கிராவிட்ஸ்-டிம் புட்ஸ் ஜோடியை எதிர்கொண்டது.

இதில் யுகி பாம்ப்ரி ஜோடி 6-4, 4-6, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

Tags:    

Similar News