டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் போபண்ணா ஜோடி வெற்றி

Published On 2024-07-04 09:52 GMT   |   Update On 2024-07-04 09:52 GMT
  • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
  • ஆண்கள் இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி வெற்றி பெற்றது.

லண்டன்:

ஒவ்வொரு ஆண்டும் நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி, நெதர்லாந்தின் ராபின் ஹாசி-சாண்டர் அரெண்ட்ஸ்

ஜோடியை எதிர்கொண்டது.

இதில் போபண்ணா ஜோடி 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News