டென்னிஸ்

தொடர்ந்து 2-வது ஆண்டாக ஜோக்கோவிச்சை வீழ்த்தி விம்பிள்டன் பட்டம் வென்றார் கார்லோஸ் அல்காரஸ்

Published On 2024-07-14 16:06 GMT   |   Update On 2024-07-14 16:06 GMT
  • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
  • விம்பிள்டன் டென்னிஸ் பிரிவில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார்.

லண்டன்:

டென்னிஸ் போட்டியில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.

இன்று இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரசை ஜோகோவிச் எதிர்கொண்டார்.

இப்போட்டியில் 6-2, 6-2, 7-6 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி அல்காரஸ் அசத்தல் வெற்றி பெற்றார்.

இதன்மூலம் விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார்.

தொடர்ச்சியாக 2வது ஆண்டாக இறுதிப்போட்டியில் செர்பியாவின் நட்சத்திர வீரர் ஜோக்கோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கார்லோஸ் அல்காரஸ் வென்றுள்ளார்.

Tags:    

Similar News