டென்னிஸ்

ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் நார்வே வீரர் அதிர்ச்சி தோல்வி

Published On 2024-07-17 12:01 GMT   |   Update On 2024-07-17 12:01 GMT
  • ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.
  • ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் நார்வே வீரர் தோல்வி அடைந்தார்.

பாஸ்தாத்:

ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

இதில் நார்வே வீரர் கேஸ்பர் ரூட், பிரேசில் வீரர் தியாகோ மான்டெய்ரோ உடன் மோதினார்.

இதில் கேஸ்பர் ரூட் 3-6, 3-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். தியாகோ மான்டெய்ரோ காலிறுதிக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News