டென்னிஸ்
சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினர் காலின்ஸ், கசட்கினா
- சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
- இதில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான கிரீசின் மரியா சக்காரி, அமெரிக்காவின் காலின்சுடன் மோதினார்.
இதில் காலின்ஸ் 6-3, 6-3 என்ற நேர்செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் ஜெசிக்கா பெகுலா, ரஷிய வீராங்கனை டேரியா கசட்கினாவை சந்தித்தார்.
இதில் முதல் செட்டை கசட்கினா 6-4 என கைப்பற்றினார். அடுத்த செட்டை பெகுலா 6-4 என கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை கசட்கினா 7-6 (7-5) என கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இன்று நள்ளிரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் காலின்ஸ், ரஷியாவின் கசட்கினாவை சந்திக்கிறார்.