டென்னிஸ்
ஜெனீவா ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், கேஸ்பர் ரூட் காலிறுதிக்கு முன்னேற்றம்
- ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.
- இதில் செர்பியாவின் ஜோகோவிச், நார்வேயின் கேஸ்பர் ரூட் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்.
சுவிட்சர்லாந்து:
ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றில் செர்பியாவின் ஜோகோவிச், ஜெர்மனியின் யானிக் ஹான்மேனுடன் மோதினார்.
இதில் ஜோகோவிச் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இது இவரது 1100-வது வெற்றி ஆகும்.
இதேபோல், நார்வேயின் கேஸ்பர் ரூட், ஆஸ்திரியாவின் செபாஸ்டியனுடன் மோதினார். இதில் ரூட் 4-6, 6-2, 6-2 என்ற செட்கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.