டென்னிஸ்
இந்தியன் வெல்ஸ் ஓபன்: மெத்வதேவ், கார்லோஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்
- ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.
- கார்லோஸ், ஜானிக் சின்னர் ஆகியோர் காலிறுதியில் வென்றனர்.
கலிபோர்னியா:
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்தியன் வெல்ஸ் பகுதியில் இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.
இதில், இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், டென்மார்க்கின் ஹோல்ஜர் ரூனே
மோதினார். இதில் மெத்வதேவ் 7-5, 6-4 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவுடன் மோதினார். இதில் கார்லோஸ் 6-3, 6-1 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், செக் நாட்டின் ஜிரி லெஹெகாவுடன் மோதினார். இதில் சின்னர் 6-3, 6-3 என கைப்பற்றி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை மறுதினம் நடைபெறும் அரையிறுதியில் சின்னரும், கார்லோசும் மோத உள்ளனர்.