டென்னிஸ்

ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் ரஷிய வீரர் அதிர்ச்சி தோல்வி

Published On 2024-07-18 08:36 GMT   |   Update On 2024-07-18 08:36 GMT
  • ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.
  • ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் ரஷிய வீரர் தோல்வி அடைந்தார்.

பாஸ்தாத்:

ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

இதில் ரஷிய வீரர் ஆண்ட்ரே ரூப்லெவ், அர்ஜெண்டினாவின் தியாகோ டிரண்டே உடன் மோதினார்.

இதில் ரூப்லெவ் 6-7 (5-7), 6-3, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். தியாகோ டிரண்டே காலிறுதிக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News