ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ரைபகினா, சபலெங்கா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
- நடப்பு விம்பிள்டன் சாம்பியனான எலெனா ரைபகினா அரையிறுதியில் அசரென்காவை வென்றார்.
- சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டி சனிக்கிழமை நடைபெற உள்ளது.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில், நடப்பு விம்பிள்டன் சாம்பியனான கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபகினா, பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா மோதினர்.
இப்போட்டியில் 7-6 (4), 6-3 என்ற செட்கணக்கில் ரைபகினா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டாவது முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார் ரைபகினா.
மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் பெலாரஸ் நாட்டின் அரினா சபலெங்கா, 7-6, 6-2 என்ற செட்கணக்கில் போலந்தின் மட்கா லினட்டை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டி சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதில், எலெனா ரைபகினா, 5ம் தரநிலை வீராங்கனையான அரினா சபலெங்காவுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.