டென்னிஸ்
விம்பிள்டன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் சுமித் நாகல் ஜோடி தோல்வி
- விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
- ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் சுமித் நாகல் தோற்றார்.
லண்டன்:
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சுமித் நாகல்-செர்பியாவின் துசன் லாஜோவிக் ஜோடி, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெட்ரோ மார்டினெஸ்-ஜௌம் மூனார் ஜோடியை எதிர்கொண்டது.
இதில் சுமித் நாகல் ஜோடி 2-6, 2-6 என நேர் செட்களில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.