டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்- 3ம் சுற்றில் பிரான்ஸ் வீரர் பெஞ்சமின்னை வீழ்த்தி டி-மினார் வெற்றி

Published On 2023-01-22 10:47 GMT   |   Update On 2023-01-22 10:47 GMT
  • டி-மினார், 7க்கு 6, 6க்கு 2, 6க்கு 1 என்ற செட் கணக்கில் சுலபமாக வெற்றி கண்டார்.
  • நாளை நடைபெறும் நான்காம் சுற்றுப் போட்டியில் முன்னாள் சாம்பியன் ஜோகோவிச்சுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் நான்காம் சுற்றுக்கு உள்ளூர் வீரர் அலெக்ஸ் டி-மினார் முன்னேறி உள்ளார்.

ஒற்றையர் பிரிவு 3ம் சுற்று ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் பெஞ்சமின் பொன்ஸி உடன் மோதிய டி-மினார், 7க்கு 6, 6க்கு 2, 6க்கு 1 என்ற செட் கணக்கில் சுலபமாக வெற்றி கண்டார்.

இந்த வெற்றி மூலம் நான்காம் சுற்றுக்கு தகுதி பெற்ற டி-மினார், நாளை நடைபெறும் நான்காம் சுற்றுப் போட்டியில் முன்னாள் சாம்பியன் ஜோகோவிச்சுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.

Tags:    

Similar News