டென்னிஸ்

நடால், ஜோகோவிச் இடையே போட்டி- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் நாளை மறுநாள் தொடக்கம்

Published On 2023-01-14 05:45 GMT   |   Update On 2023-01-14 05:45 GMT
  • ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வெல்ல ரபெல் நடால், ஜோகோவிச் இடையே கடும் போட்டி.
  • ஓய்வு பெற்ற ரோஜர் பெடரர் 20 கிராண்ட் சிலாமுடன் 3-வது இடத்தில் உள்ளார்.

மெல்போர்ன்:

ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட் சிலாம் டென்னிஸ் போட்டிகள் நடைபெறும்.

இந்த ஆண்டின் முதல் கிராண்ட் சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நாளை மறுநாள் (16-ந் தேதி) தொடங்குகிறது. 29-ந் தேதி வரை இந்தப்போட்டி நடக்கிறது.

ஸ்பெயினை சேர்ந்த ரபெல் நடாலும், செர்பியா நாட்டை சேர்ந்த ஜோகோ விச்சும் கிராண்ட் சிலாம் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.

கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன், பிரெஞ்சு ஓபன் பட்டத்தை நடாலும், விம்பிள்டனை ஜோகோவிச்சும் கைப்பற்றி இருந்தனர். இருவரும் 43 கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்று உள்ளனர். நடால் 22 கிராண்ட் சிலாமுடன் (ஆஸ்திரேலிய ஓபன் 2, பிரெஞ்சு ஓபன் 14, விம்பிள்டன் 2, அமெரிக்க ஓபன் 4) முதல் இடத்திலும், ஜோகோவிச் 21 கிராண்ட் சிலாமுடன் (ஆஸ்திரேலிய ஓபன் 9, பிரெஞ்சு ஓபன் 2, விம்பிள்டன் 7, அமெரிக்க ஓபன் 3) 2-வது இடத்திலும் உள்ளனர்.

ஓய்வு பெற்ற ரோஜர் பெடரர் 20 கிராண்ட் சிலாமுடன் 3-வது இடத்தில் உள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வெல்ல ரபெல் நடால், ஜோகோவிச் இடையே கடும் போட்டி நிலவும். இந்த போட்டியின் முதல்நிலை வீரராக நடால் உள்ளார். ஜோகோவிச் 4-வது வரிசையில் இருக்கிறார்.

கேஸ்பர் ரூட் (நார்வே), சிட்சிபாஸ் (கிரீஸ்), ரூப் லெவ் (ரஷியா), பெலிக்ஸ் (கனடா), மெட்வதேவ் (ரஷியா) உள்ளிட்ட வீரர்கள் அவர்களுக்கு கடும் சவாலாக இருப்பார்கள்.

பெண்கள் பிரிவில் கடந்த முறை ஆஸ்லே பார்டி சாம்பியன் பட்டம் பெற்றார். போலாந்தை சேர்ந்த இகா சுவிடெக் இந்தப் போட்டியின் முதல் நிலை வீராங்கனையாக உள்ளார்.

ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), ஷபலென்கா (பெலாரஸ்), கரோலின் கார்சியா (பிரான்ஸ்), மரியா ஷகாலி (கிரீஸ்) சோகோ கபூர் (அமெரிக்கா) உள்ளிட்ட வீராங்கனைகளும் சாம்பியன் பட்டத்தை பெறுவதற்கான போட்டியில் உள்ளனர்.

Tags:    

Similar News