search icon
என் மலர்tooltip icon

    மீனம்

    இந்தவார ராசிபலன்

    17.6.2024 முதல் 23.6.2024 வரை

    செயலில் ஏற்றம், சிந்தனையில் மாற்றம் ஏற்படும் வாரம். ஆட்சி பலம் பெற்ற சுக ஸ்தான அதிபதி புதனுடன் அஷ்டமாதிபதி சுக்ரன் மற்றும் ருணரோக சத்ரு ஸ்தான அதிபதி சூரியன் சேருவதால் தாய் வழி உறவுகளுடன் மன பேதம் ஏற்படலாம். சிலர் கோபத்தால் நல்ல வாய்ப்புகளை உறவுகளை இழக்க நேரும். தந்தை வழி உறவுகளிடம் இருந்த சங்கடங்கள், பிரச்சினைகள் விலகி ஆதரவு உண்டாகும்.தொழில், உத்தியோக ரீதியான வழக்கின் தீர்ப்பு சாதகமாகும். தொழில், உத்தியோகம் காரணமாக சிலரின் தந்தை குடும்பத்தை பிரிந்து வெளியூர் செல்லலாம்.

    கணவன் மனைவியிடம் ஒற்றுமை அதிகரிக்கும்.குல தெய்வ கோவில் மற்றும் ஆலயத் திருப்பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாட்டில் வசிக்கும் சிலர் விடுமுறைக்கு பூர்வீகம் வந்து செல்லலாம். 19.6.2024 பகல் 11.05 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அதிக முதலீடுகள் கொண்ட தொழில் நடத்துபவர்கள் சற்று நிதானத்துடன் செயல்படவும். கோபத்தால், தெளிவற்ற சிந்தனையால் நல்ல வாய்ப்புகளை தவற விடலாம். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பவுர்ணமியன்று சித்தர்களை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×