search icon
என் மலர்tooltip icon

    மீனம்

    இந்தவார ராசிபலன்

    15.7.2024 முதல் 21.7.2024 வரை

    அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும் வாரம். ராசி அதிபதி குரு 2,9ம் அதிபதி செவ்வாயுடன் இணைந்து சகாய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். தொழில்துறையில், வேலையில் போட்டி, பொறாமை, இடையூறு, இன்னல்கள் இருந்தாலும் எந்த பாதிப்பும் இல்லாமல் எல்லாம் நிறைவாக நிறைவேறும். உத்தியோகத்தில் உங்கள் நிலை மேம்படும். பணியில் இருப்பவர்கள் தேவையான நேரத்தில் வேகமாக செயல்படுவதன் மூலம் உயர் அதிகாரிகளின் பாராட்டு பெறமுடியும். பாகப்பிரிவினை சுமூகமாகும். ஜாமீன் வழக்குகள் சாதகமாகும். உறவுகளிடம் நிலவிய கவுரவப் போராட்டம் விலகி ஒற்றுமை பலப்படும்.

    சனி வக்ரம் பெறுவதால் ஏழரை சனியால் நீங்கள் அனுபவித்த துன்பம், துயரத்திலிருந்து விடுதலை கிடைக்கப் போகிறது. 16.7.2024 அன்று மாலை 7.51 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். விலை உயர்ந்த உடமைகளில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை குறைத்துக் கொள்ளவும். சின்ன மாரியம்மனை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×