search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    இந்தியாவில் ஹோன்டா சி.பி.ஆர்.650ஆர் விநியோகம் துவக்கம்
    X

    இந்தியாவில் ஹோன்டா சி.பி.ஆர்.650ஆர் விநியோகம் துவக்கம்

    ஹோன்டா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த சி.பி.ஆர்.650ஆர் மோட்டார்சைக்கிளின் விநியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹோன்டா சி.பி.ஆர்.650ஆர் மோட்டார்சைக்கிள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. ஹோன்டா நிறுவனம் புதிய மோட்டார்சக்கிளுக்கான முன்பதிவுகளை பிப்ரவரி மாதத்தில் துவங்கியது. மூன்று மாத கால காத்திருப்புக்கு பின் மோட்டார்சைக்கிள் விநியோக பணிகள் துவங்கி இருக்கின்றன.

    புதிய சி.பி.ஆர்.650ஆர் மாடலில் டூயல்-ஹெட்லேம்ப் வடிவமைப்பு, எக்ஸ்போஸ்டு என்ஜின் மற்றும் டெயில் பகுதி உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் க்ளிப்-ஆன் ஹேன்டிள்பார்கள், 30எம்.எம். அளவில் குறைக்கப்பட்டுள்ளது. இத்துடன் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், டிஜிட்டல் எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், செலக்டபிள் டார்க் கண்ட்ரோல், ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் க்விக் ஷிஃப்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.



    ஹோன்டா சி.பி.ஆர்.650ஆர் மாடலில் 649சிசி, லிக்விட் கூல்டு இன்லைன் 4-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 95 பி.ஹெச்.பி. பவர் @12,000 ஆர்.பி.எம். செயல்திறன், 64 என்.எம். டார்க் @8500 ஆர்.பி.எம். வழங்குகிறது. 2019 ஹோன்டா சி.பி.ஆர்.650ஆர் மாடலின் முன்புறம் யு.எஸ்.டி. ஃபோர்க், பின்புறம் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

    பிரேக்கிங்கை பொருத்தவரை முன்புறம் டூயல் டிஸ்க் செட்டப், பின்புறம் ஒற்றை டிஸ்க் பிரேக் மற்றும் டூயல்-சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்படுகிறது. புதிய ஹோன்டா சி.பி.ஆர்.650ஆர் மாடல் மேட் கன்பவுடர் பிளாக் மெட்டாலிக் மற்றும் கிராண்ட் ப்ரிக்ஸ் ரெட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது.

    இந்தியாவில் ஹோன்டா சி.பி.ஆர்.650ஆர் விலை ரூ.7.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் கவாசகி இசட்900 மற்றும் சுசுகி GSX 750 போன்ற மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக அமைகிறது.
    Next Story
    ×