search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    குளோபல் NCAP-இல் 2022 ஸ்விஃப்ட் - எத்தனை ஸ்டார் தெரியுமா?
    X

    குளோபல் NCAP-இல் 2022 ஸ்விஃப்ட் - எத்தனை ஸ்டார் தெரியுமா?

    • குளோபல் NCAP கிராஷ் டெஸ்டில் மாருதி சுசுகி, மஹிந்திரா என பல்வேறு முன்னணி நிறுவன கார் மாடல்கள் பரிசோதனை செய்யப்பட்டன.
    • கிராஷ் டெஸ்டில் கலந்து கொண்ட கார்கள் பெற்ற முடிவுகள் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளன.

    குளோபல் NCAP 2022 மாருதி சுசுகி ஸ்விஃப்ட் மாடலை மீண்டும் ஒரு முறை டெஸ்ட் செய்தது. இதில் புதிய ஸ்விஃப்ட் கார் வெறும் 1 ஸ்டார் பெற்று அதிர்ச்சி அளித்து இருக்கிறது. ஸ்விஃப்ட் மாடலுடன் இக்னிஸ், எஸ் பிரெஸ்ஸோ மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ N போன்ற மாடல்களும் டெஸ்ட் செய்யப்பட்டன. இந்த ஆண்டு ஜூலை மாதம் அமலுக்கு வந்த புது விதிமுறைகளின் கீழ் இந்த கார்கள் டெஸ்ட் செய்யப்பட்டன.

    இதில் டெஸ்ட் செய்யப்பட்ட மாடல் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டது. இதன் முன்புறம் இரட்டை ஏர்பேக், சீட் பெல்ட் பிரிடென்ஷனர்கள், ரியர் ISOFIX ஆன்கர்கள், சீட் பெல்ட் ரிமைண்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய ஸ்விஃப்ட் மாடலை முன்னதாக 2018 வாக்கில் குளோபல் NCAP டெஸ்ட் செய்து இருந்தது. அப்போது இந்த கார் இரண்டு ஸ்டார்களை பெற்று இருந்தது.

    2022 ஸ்விஃப்ட் மாடல் பெரியவர்கள் பயணிக்கும் போது மேற்கொள்ளப்பட்ட டெஸ்டில் 34-க்கு வெறும் 19.19 புள்ளிகளையே பெற்று இருந்தது. முன்புறமாக இடிக்கும் போது ஸ்விஃப்ட் கார் ஓட்டுனர் மற்றும் முன்புற இருக்கையில் அமர்ந்து இருந்த பயணிக்கு சிறந்த பாதுகாப்பை அளித்து இருக்கிறது. பக்கவாட்டில் நடத்தப்பட்ட டெஸ்டில் ஸ்விஃப்ட் கார் பயணிகளின் மார்பு பகுதியை சரியாக பாதுகாக்கவில்லை.

    குழந்தைகளுக்கான பாதுகாப்பிற்காக நடத்தப்பட்ட டெஸ்டில் மாருதி சுசுகி ஸ்விஃப்ட் மாடல் 49-க்கு 16.68 புள்ளிகளை பெற்று இருக்கிறது. இதில் டைனமிக் ஸ்கோர் 12.82 புள்ளிகளும், CRS (சைல்டு ரெஸ்ட்ரைன் சிஸ்டம்) இன்ஸ்டாலேஷன் ஸ்கோர் 3.86 புள்ளிகளும் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

    Next Story
    ×