என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
பைக்
இந்தியாவில் அறிமுகமான 2023 ஹோண்டா SP125
- ஹோண்டா நிறுவனத்தின் 2023 SP125 மோட்டார்சைக்கிள் இரண்டு விதமான வேரியண்ட்களில் கிடைக்கிறது.
- முற்றிலும் புதிய நிறத்தில் கிடைக்கும் 2023 ஹோண்டா SP125 OBD2 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் OBD2 விதிகளுக்கு பொருந்தும் SP125 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய 2023 ஹோண்டா SP125 மாடலின் விலை ரூ. 85 ஆயிரத்து 131 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 2023 மாடல் புதிய விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்ததோடு, புதிய நிறத்திலும் கிடைக்கிறது.
2023 ஹோண்டா SP125 மாடலில் ஆன்போர்டு பரிசோதனை சிஸ்டம் உள்ளது. இது மோட்டார்சைக்கிள் வெளிப்படுத்தும் காற்று மாசு விவரங்களை ரியல்டைமில் காண்பிக்கும். இத்துடன் 2023 ஹோண்டா SP125 மாடல் புதிதாக மேட் மார்வல் புளூ மெட்டாலிக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் மூலம் SP125 மாடல் தற்போது- பிளாக், மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக், இம்பீரியல் ரெட் மெட்டாலிக், பியல் சைரென் புளூ மற்றும் புதிய மேட் மார்வெல் புளூ மெட்டாலிக் என ஐந்துவிதமான நிறங்களில் கிடைக்கிறது.
புதிய மாடல் அதன் முந்தைய வெர்ஷனை போன்றே சிங்கில் பாட் ஹெட்லைட், பாடி நிறத்தால் ஆன ஹெட்லைட் கவுல், முன்புற ஃபெண்டர், ஃபியூவல் டேன்க் ஷிரவுட்கள், பாடி நிறத்தால் ஆன பில்லியன் கிராப் ரெயில், சைடு ஸ்லங் எக்சாஸ்ட், க்ரோம் ஹீட் ஷீல்டு கொண்டிருக்கிறது. இதன் ஸ்டைலிங் மோட்டார்சைக்கிளுக்கு அதிநவீன தோற்றத்தை வழங்கி இருக்கிறது.
2023 ஹோண்டா SP125 மாடலில் எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், பிஸ்டன் கூலிங் ஜெட், எஞ்சின் ஸ்டார்ட்/ஸ்டாப் ஸ்விட்ச், கம்பைன்டு பிரேகிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் ஃபியூவல் விரங்கள், இகோ இண்டிகேட்டர் மற்றும் கியர் பொசிஷன் போன்ற விவரங்களை காண்பிக்கிறது.
முந்தைய போன்றே 2023 ஹோண்டா SP125 மாடலும் டிரம் மற்றும் டிஸ்க் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் டிரம் வேரியண்ட் விலை ரூ. 85 ஆயிரத்து 131 என்றும் டிஸ்க் பிரேக் வேரியண்ட் விலை ரூ. 89 ஆயிரத்து 131 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்திய சந்தையில் புதிய ஹோண்டா SP125 மோட்டார்சைக்கிள் டிவிஎஸ் ரைடர் 125 மற்றும் ஹீரோ கிளாமர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்