என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
பைக்
ஹார்லி ஸ்டைலில் புது ஹீரோ பைக் - வெளியீடு எப்போ தெரியுமா?
- ஹார்லி டேவிட்சன் X440 ரோட்ஸ்டர் மாடலை தழுவி உருவாகியுள்ளது.
- மேவரிக் 440 மாடல் ஐந்துவிதமான நிறங்களில் கிடைக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முற்றிலும் புதிய மேவரிக் 440 மோட்டார்சைக்கிள் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டன. ஹீரோ வொர்ல்டு 2024 நிகழ்வில் அறிவிக்கப்பட்ட நிலையில், புதிய மேவரிக் மோட்டார்சைக்கிள் ஹார்லி டேவிட்சன் உடனான கூட்டணியின் கீழ் உருவாக்கப்பட்டது. இந்த மோட்டார்சைக்கிள் ஹார்லி டேவிட்சன் X440 ரோட்ஸ்டர் மாடலை தழுவி உருவாகியுள்ளது.
இந்திய சந்தையில் புதிய ஹீரோ மேவரிக் 440 மாடல் ஐந்துவிதமான நிறங்கள் மற்றும் மூன்று வேரியன்ட்களில் கிடைக்கும். இதன் பேஸ் வெர்ஷன் ஸ்போக் வீல்கள், ஆர்க்டிக் வைட் எனும் ஒற்றை நிறத்தில் கிடைக்கிறது. மிட் வேரியன்ட் அலாய் வீல்கள், செல்ஸ்டியல் புளூ மற்றும் ஃபியர்லெஸ் ரெட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. டாப் என்ட் மாடல் மெஷின்டு அலாய், ஃபேண்டம் பிளாக் மற்றும் எனிக்மா பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.
புதிய மேவரிக் 440 மாடலில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லேம்ப், எல்.இ.டி. ப்ரோஜெக்டர் செட்டப், H வடிவம் கொண்ட டி.ஆர்.எல்., டியுபுலர் ஹேண்டில்பார் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை மோட்டார்சைக்கிளுக்கு ஸ்போர்ட் தோற்றத்தை வழங்குகிறது. இத்துடன் முழுமையான எல்.இ.டி. லைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், கால், மெசேஜ் அலர்ட் போன்ற வசதிகள் உள்ளன.
இந்த பைக்கில் யு.எஸ்.பி. சி சார்ஜிங் போர்ட் மற்றும் ஸ்லிப்பர்ட் கிளட்ச் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் 440சிசி, ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே என்ஜின் ஹார்லி டேவிட்சன் X440 மோட்டார்சைக்கிளிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 27 ஹெச்.பி. பவர், 36 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.
இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு மற்றும் வெளியீடு பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கிறது. வினியோகம் ஏப்ரல் மாத வாக்கில் துவங்கும் என்று எதிர்பார்க்கலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்