search icon
என் மலர்tooltip icon

    பைக்

    101 கி.மீ. ரேஞ்ச் வழங்கும் ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்
    X

    101 கி.மீ. ரேஞ்ச் வழங்கும் ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

    • ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஐந்து நிறங்களில் கிடைக்கிறது.
    • இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 101 கி.மீ. ரேஞ்ச் வழங்கும்.

    ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டிவா e: எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. புதிய ஆக்டிவா e: எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் எல்.இ.டி. ஹெட்லைட், எல்.இ.டி. டி.ஆர்.எல். உள்ளது. இதன் பக்கவாட்டில் சில்வர் அக்சென்ட்கள் உள்ளன. இந்த ஸ்கூட்டர் எளிமையான டிசைன் கொண்டிருக்கிறது.

    இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தோற்றம் மிக எளிமையாகவும், அதிநவீனத்துவத்தை வெளிப்படுத்தும் வகையிலும் இருக்கும் படி உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஆக்டிவா e: எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்- பியல் ஷாலோ புளூ, பியல் மிஸ்டி வைட், பியல் செரினிட்டி புளூ, மேட் ஃபாகி சில்வர் மெட்டாலிக் மற்றும் பியல் இக்னியஸ் பிளாக் என ஐந்து நிறங்களில் கிடைக்கிறது.


    புதிய ஆக்டிவா e: எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 1.5 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட கழற்றி மாற்றிக் கொள்ளும் பேட்டரிகளை கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் உள்ள இரு பேட்டரிகளை முழு சார்ஜ் செய்தால் 102 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஆக்டிவா e: டாப் எண்ட் மாடலில் டிஎப்டி டிஸ்ப்ளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி, அழைப்புகள் மற்றும் நேவிகேஷன் அலர்ட்களை வழங்கும் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டரில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 6 கிலோவாட் திறன் வெளிப்படுத்தும். இது மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தை 7.3 நொடிகளில் எட்டிவிடும்.

    இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இகோ, ஸ்டாண்ட்ர்டு மற்றும் ஸ்போர்ட் என மூன்றுவித ரைடிங் மோட்களை கொண்டுள்ளது. இது மணிக்கு அதிகபட்சம் 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. புதிய ஆக்டிவா e: எலெக்ட்ரிக் மாடலுக்கான முன்பதிவுள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதமும், விநியோகம் பிப்ரவரி மாதமும் துவங்க இருக்கிறது.

    Next Story
    ×