search icon
என் மலர்tooltip icon

    பைக்

    டெஸ்டிங்கில் சிக்கிய கே.டி.எம். 390 அட்வென்ச்சர்
    X

    டெஸ்டிங்கில் சிக்கிய கே.டி.எம். 390 அட்வென்ச்சர்

    • இந்த மாடல் முற்றிலும் புதிதாக உருவாக்கப்பட்டு வருகிறது.
    • இந்த மாடலில் 399 சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படலாம்.

    கே.டி.எம். நிறுவனத்தின் அடுத்த தலைமுறை 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் விரைவில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், புதிய மாடல் இந்தியாவில் டெஸ்டிங் செய்யப்பட்டு வருகிறது. சேசிஸ் முதல் டிசைன் வரை இந்த மாடல் முற்றிலும் புதிதாக உருவாக்கப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே இந்த பைக் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் ஸ்பை படங்களில் புதிய கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் ஆஃப் ரோடு டெஸ்டிங் செய்யப்படுகிறது. இந்த பைக்கின் டிசைன் கே.டி.எம். ரேலி பைக்குகளை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.


    இதில் ஹை-மவுன்ட் ஃபேரிங், எல்.இ.டி. ப்ரோஜெக்டர் லைட்கள், உயரமான வின்ட் ஸ்கிரீன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதன் ஃபியூவல் டேன்க் மெல்லியதாக காட்சியளிக்கிறது. புதிய 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    புதிய கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடலில் சமீபத்தில் அறிமுகமான 390 டியூக் மாடல்களில் வழங்கப்பட்ட 399 சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த என்ஜின் 45.3 ஹெச்.பி. பவர், 39 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதும் இந்த மாடல் ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 மாடலுக்கு போட்டியாக அமையும்.

    Next Story
    ×