search icon
என் மலர்tooltip icon

    பைக்

    குறைந்த விலையில் இவ்வளவு அம்சங்களா? இந்தியாவில் அறிமுகமான டி.வி.எஸ். அபாச்சி RTR310
    X

    குறைந்த விலையில் இவ்வளவு அம்சங்களா? இந்தியாவில் அறிமுகமான டி.வி.எஸ். அபாச்சி RTR310

    • டி.வி.எஸ். அபாச்சி RTR310 மாடலில் கிளைமேட் கண்ட்ரோல் சீட் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • அபாச்சி RTR310 மாடலிலும் 312.2சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு மோட்டார் உள்ளது.

    டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் தனது சக்திவாய்ந்த மற்றும் புதிய நேக்கட் மோட்டார்சைக்கிள் மாடலை அபாச்சி RTR310 பெயரில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மாடல் அபாச்சி RR310 மோட்டார்சைக்கிளை சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த மாடலில் ஸ்ப்லிட் ரக எல்.இ.டி. ஹெட்லைட்கள், கூர்மையான ஃபியூவல் டேன்க் மற்றும் ஷிரவுட்கள், இரட்டை பீஸ் இருக்கைகள், உயர்த்தப்பட்ட டெயில் பகுதி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் எக்சாஸ்ட் அபாச்சி RR310 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் ஒற்றை பீஸ் டியுபுலர் ஹேண்டில்பார் மற்றும் ரியர் செட் ஃபூட்பெக்குகள் உள்ளன.

    அபாச்சி RTR310 மாடலிலும் 312.2சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 35 ஹெச்.பி. பவர், 28.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் மணிக்கு அதிகபட்சம் 150 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்று கூறப்படுகிறது.

    புதிய டி.வி.எஸ். அபாச்சி RTR310 மாடலில் ரிவைஸ்டு ஃபிரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் முன்புறம் யு.எஸ்.டி. ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் ஒற்றை டிஸ்க் பிரேக், பின்புறம் இரட்டை டிஸ்க் பிரேக் மற்றும் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.

    எல்.இ.டி. லைட்கள் தவிர இந்த மாடலில் முழுமையான டிஜிட்டல் டி.எஃப்.டி. ஸ்கிரீன் மற்றும் கனெக்ட் கோ ப்ரோ ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய அபாச்சி RTR310 மாடலில் கிளைமேட் கண்ட்ரோல் சீட், 6-ஆக்சிஸ் IMU யூனிட், கார்னெரிங் டிராக்ஷன் கண்ட்ரோல், கார்னெரிங் குரூயிஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன.

    இந்திய சந்தையில் புதிய டி.வி.எஸ். அபாச்சி RTR310 மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 43 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் கே.டி.எம். டியூக் 390, பி.எம்.டபிள்யூ. G 310 R மற்றும் கே.டி.எம். 250 டியூக் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    Next Story
    ×