search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    இந்திய விற்பனையில் தொடர்ந்து அசத்தும் இன்னோவா க்ரிஸ்டா
    X

    இந்திய விற்பனையில் தொடர்ந்து அசத்தும் இன்னோவா க்ரிஸ்டா

    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எம்.பி.வி. ரக வாகனங்களின் விற்பனையில் டொயோட்டாவின் இன்னோவா க்ரிஸ்டா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. #Toyota #Car



    டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா கார் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எம்.பி.வி. ரக வாகனமாக இருக்கிறது. டிசம்பர் 2018இல் மட்டும் இன்னோவா க்ரிஸ்டா காரை வாங்க சுமார் 11,200 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் டொயோட்டா நிறுவனம் சுமார் ரூ.2200 கோடிக்கும் அதிகளவு வியாபாரம் செய்திருக்கிறது.

    இந்தியாவில் எம்.பி.வி. வாகனங்களுக்கான சந்தை அதிகளவு போட்டி ஏற்பட்டுள்ளது. புதுவரவு வாகனங்களான மஹிந்திரா மராசோ, மாருதி எர்டிகா போன்ற வாகனங்கள் அதிகளவு வரவேற்பு பெற்று வரும் நிலையில் விரைவில் வெளியாக இருக்கும் ரெனால்ட் என்.பி.சி. உள்ளிட்ட வாகனங்கள் சந்தையில் அதிகளவு போட்டியை ஏற்படுத்தியிருக்கின்றன.



    விற்பனையை பொருத்த வரை 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது கடந்த ஆண்டு டிசம்பரில் இருமடங்கு அதிகளவு இன்னோவா க்ரிஸ்டா வாகனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த விற்பனையை பொருத்த வரை இன்னோவா க்ரிஸ்டா கார் சுமார் 80,000 அதிக யூனிட்களை கடந்துள்ளது.

    இன்னோவா க்ரிஸ்டா கார் இருவித டீசல் என்ஜின்கள்: 2.4 லிட்டர் (5-ஸ்பீடு மேனுவல்) மற்றும் 2.8 லிட்டர் (6-ஸ்பீடு ஆட்டோமேடிக்) ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த என்ஜின்கள் 150 பி.ஹெச்.பி. பவர், 343 என்.எம். டார்க் மற்றும் 174 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 360 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    2016 ஆண்டில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா கார் ரூ.13.84 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், மும்பை) விலையில் துவங்கி அதிகபட்சம் ரூ.20.78 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டது. 
    Next Story
    ×