search icon
என் மலர்tooltip icon

    கார்

    2024 Hyundai Alcazar
    X

    புதுப்புது அப்டேட்கள்.. 2024 ஹூண்டாய் அல்கசார் அறிமுகம்

    • ஒட்டுமொத்த வெளிப்புற தோற்றத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
    • இந்த கார் இருவித எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் தனது அல்கசார் எஸ்யுவி மாடலை அப்டேட் செய்தது. புதிய அல்கசார் மாடலின் விலை தற்போது ரூ. 14 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இதன் டீசல் வேரியண்ட் விலை ரூ. 15 லட்சத்து 99 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த காரின் வெளிப்புறத்தில் புதிய கிரில், ஹெட்லேம்ப்கள், புதிய டிசைன் கொண்ட அலாய் வீல்கள், ஹூண்டாய் கனெக்டெட் டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த வெளிப்புற தோற்றத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    2024 அல்கசார் மாடல் அட்லஸ் வைட், அபிஸ் பிளாக் பியல், ரேஞ்சர் காக்கி, ஃபியெரி ரெட், ரோபஸ்ட் எமிரால்டு பியல், ஸ்டாரி நைட், டைட்டன் கிரே மேட் மற்றும் அட்லஸ் வைட் மற்றும் அபிஸ் பிளாக் ரூஃப் வழங்கப்படுகிறது.


    உள்புறத்தில் இரட்டை டிஜிட்டல் டிஸ்ப்ளே, வென்டிலேட் செய்யப்பட்ட ரியர் இருக்கைகள், பானரோமிக் சன்ரூஃப், டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா, லெவல் 2 ADAS, 6 மற்றும் 7 பேர் பயணிக்கக்கூடிய இருக்கை அமைப்புகள் வழங்கப்படுகிறது.

    புதிய ஹூண்டாய் அல்கசார் மாடல் 1.5 லிட்டர் GDi டர்போ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 158 ஹெச்பி பவர், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் 1.5 லிட்டர் டீசல் யூனிட் 113 ஹெச்பி பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

    இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், 7 ஸ்பீடு DCT யூனிட் மற்றும் 6 ஸ்பீடு AT ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதே பவர்டிரெயின் ஆப்ஷன்கள் கிரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் கியா கரென்ஸ் மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    Next Story
    ×