search icon
என் மலர்tooltip icon

    கார்

    625கிமீ ரேஞ்ச் வழங்கும் ஆடி எலெக்ட்ரிக் கார் - இந்திய டெஸ்டிங் துவக்கம்
    X

    625கிமீ ரேஞ்ச் வழங்கும் ஆடி எலெக்ட்ரிக் கார் - இந்திய டெஸ்டிங் துவக்கம்

    • ஆடி க்யூ 6 இ ட்ரான் இடது பக்கம் அமர்ந்து டிரைவ் டிரைவ் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • இண்டீரியரில் Q6 e-tron 11.9-இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

    இந்தியாவில் பலராலும் அதிகம் விரும்பப்படும் கார் நிறுவனங்களில் ஆடியும் ஒன்று. ஆடி என்றாலே விலையுயர்ந்த மற்றும் சொகுசு வசதிகள் கொண்ட கார்களை தயாரிக்கும் நிறுவனம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

    இந்த நிலையில், நடப்பு ஆண்டின் இறுதியில் புதிய க்யூ 6 இ ட்ரானை அறிமுகப்படுத்துவதற்கு ஆடி திட்டமிட்டுள்ளது. இதற்கு முன் அந்த காருக்கான சோதனையை இந்தியாவில் செய்ய துவங்கியது.

    முன்னதாக வெளியான க்யூ 6 இ ட்ரான் தொடர்பான புகைப்படங்களை சோதனைக் காரின் ஒரு யூனிட்டை முற்றிலும் மறைக்காமல் வெளிப்படுத்தின.


    ஆடி க்யூ 6 இ ட்ரான் இடது பக்கம் அமர்ந்து டிரைவ் டிரைவ் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச அளவில் விற்கப்படும் மாடலுடன் ஒப்பிடுகையில், முன் மற்றும் பின்பக்க பம்பர்களில் சில்வர் இன்சர்ட்கள் மற்றும் புதிய அலாய் வீல்கள் உட்பட சிறிய வேறுபாடுகளைப் பெறுகிறது.

    புதிய Q6 e-tron இன் சில குறிப்பிடத்தக்க வடிவமைப்பு அம்சங்களில் மேட்ரிக்ஸ் LED ஹெட்லேம்ப்கள், பிளாங்க்-ஆஃப் கிரில், OLED டெயில் லைட்கள், ரூஃப் ரெயில்கள், ஷார்க்-ஃபின் ஆண்டெனா, உயர் பொருத்தப்பட்ட ஸ்டாப் லேம்புடன் கூடிய ஒருங்கிணைந்த ஸ்பாய்லர் மற்றும் ஒரு LED லைட் பார் ஆகியவை அடங்கும்.

    இண்டீரியரில் Q6 e-tron 11.9-இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதனை ஆடி நிறுவனம் விர்ச்சுவல் அதாவது மெய்நிகர் காக்பிட் என்று அழைக்கிறது, 14.5-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முன் பயணிகளுக்கான 10.9-இன்ச் டிஸ்ப்ளே, டச்-அடிப்படையிலான புதிய ஸ்டீயரிங் கட்டுப்பாடுகள், ஆக்மென்டட் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மற்றும் மூன்று-டோன் இன்டீரியர் தீம் கொண்டுள்ளது.

    ஹூட்டின் கீழ், ஆடி க்யூ6 இ-ட்ரான் இரட்டை மின்சார மோட்டார்களுடன் இணைக்கப்பட்ட 100கிலோவாட் பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது. 270கிலோவாட் சார்ஜர் உதவியுடன் 21 நிமிடங்களில் 10-80 சதவீதம் வரை சார்ஜ் செய்யக்கூடிய இந்த பேட்டரி, ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 625கிமீ தூரம் வரை செல்லும் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×