search icon
என் மலர்tooltip icon

    கார்

    எம்.எஸ்.டோனியை கவுரவிக்கும் விதமாக டோனி எடிஷன் காரை அறிமுகப்படுத்திய சிட்ரோயன்
    X

    எம்.எஸ்.டோனியை கவுரவிக்கும் விதமாக 'டோனி எடிஷன்' காரை அறிமுகப்படுத்திய சிட்ரோயன்

    • சிறப்பு எடிஷனாக 100 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது.
    • இந்த காரை வாங்க டோனியின் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சிட்ரோயன் இந்தியா நிறுவனத்தின் ப்ராண்ட் அம்பாசிட்டராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி கடந்த மே மாதம் நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில் எம்.எஸ்.டோனியை கவுரவிக்கும் விதமாக தோனி எடிஷன் சி3 ஏர்கிராஸ் என்ற புதிய காரை சிட்ரோயன் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.

    இந்த காரின் ஷோ ரூம் விலை ரூ.11.82 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சாதாரண சி3 ஏர்கிராஸ் காரின் விலை ரூ.8.99 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    சிறப்பு எடிஷனாக 100 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த காரை வாங்க டோனியின் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த சிறப்பு காரில் டோனி கிளவ்ஸ் பெட்டி ஒன்று இருக்கும் என்றும், 100 கார்களில் ஏதேனும் ஒரு காரில் டோனி ஆடோகிராப் போட்ட அவரின் கிளவ்ஸ் ஒன்றும் இருக்கும் என்றும், இது இந்த காரை வாங்கும் டோனி ரசிகரை ஆச்சரியப்படுத்தும் என்று கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×