என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கார்
முன்பதிவில் 10 ஆயிரம் யூனிட்களை கடந்த புதிய ஹூண்டாய் வெர்னா
- ஹூண்டாய் நிறுவனத்தின் 2023 வெர்னா டாப் எண்ட் மாடலின் விலை ரூ. 17 லட்சத்து 38 ஆயிரம் ஆகும்.
- புதிய 2023 ஹூண்டாய் வெர்னா மாடலுக்கான முன்பதிவு கடந்த மாதம் துவங்கியது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் சமீபத்தில் தனது ஆறாவது தலைமுறை ஹூண்டாய் வெர்னா மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா மாடல் விலை ரூ. 10 லட்சத்து 90 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17 லட்சத்து 38 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
2023 வெர்னா மாடலின் விலை அறிவிக்கும் போதே இதனை வாங்க சுமார் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருந்தனர். தற்போது 2023 ஹூண்டாய் வெர்னா கார் முன்பதிவில் 10 ஆயிரத்திற்கும் அதிக கடந்துள்ளது. கடந்த மாதம் 13 ஆம் தேதி புதிய ஹூண்டாய் காருக்கான முன்பதிவு துவங்கியது. முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் ஆகும்.
2023 ஹூண்டாய் வெர்னா மாடல் EX, S, SX, மற்றும் SX(O) என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றுடன் இரண்டு பெட்ரோல் என்ஜின்கள், அதிக டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. முற்றிலும் புதிய 2023 ஹூண்டாய் வெர்னா மாடல் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின், புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இதில் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் T-GDi யூனிட் ஆகும். இது 158 ஹெச்பி பவர், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் NA பெட்ரோல் என்ஜின் 113 ஹெச்பி பவர், 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை கொண்டிருக்கிறது. டிரான்ஸ்மிஷனை பொருத்தவரை 6 ஸ்பீடு மேனுவல் யூனிட், IVT யூனிட், 7 ஸ்பீடு DCT யூனிட் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் வெர்னா மாடல் மாருதி சுசுகி சியாஸ், ஹோண்டா சிட்டி, ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லேவியா மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.