search icon
என் மலர்tooltip icon

    கார்

    மஹிந்திரா XUV 3XO புக்கிங் - லீக் ஆன முக்கிய தகவல்
    X

    மஹிந்திரா XUV 3XO புக்கிங் - லீக் ஆன முக்கிய தகவல்

    • மஹிந்திரா XUV 3XO மாடலுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
    • இது மஹிந்திரா XUV 300 காரின் பேஸ்லிப்ட் வெர்ஷன் ஆகும்.

    மஹிந்திரா நிறுவனம் இம்மாத இறுதியில் (ஏப்ரல் 29) தனது அதிகம் எதிர்பார்க்கப்படும் XUV 3XO அறிமுகம் செய்ய இருக்கிறது. கடந்த சில நாட்களாக இந்த காருக்கான டீசர்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, மஹிந்திரா XUV 3XO மாடலுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில், தேர்வு செய்யப்பட்ட விற்பனை மையங்களில் மஹிந்திரா XUV 3XO மாடலுக்கான முன்பதிவுகள் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் என்றும் இவை அதிகாரப்பூர்வமாக நடைபெறவில்லை என்றும் கூறப்படுகிறது.


    புதிய XUV 3XO மாடல் மஹிந்திரா நிறுவனத்தின் XUV 300 காரின் பேஸ்லிப்ட் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். இந்த மாடல் பெயர் மட்டுமின்றி டிசைன் அடிப்படையிலும் முழுமையாக மாற்றப்பட்டு இருக்கிறது. இதன் முன்புறம் மெல்லிய கிரில், இன்வெர்ட் செய்யப்பட்ட சி வடிவ எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், டூயல் பாரெல் எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், டுவீக் செய்யப்பட்ட பம்ப்பர் வழங்கப்படுகிறது.

    இதன் பின்புறம் ரிடிசைன் செய்யப்பட்ட பம்ப்பர், எல்.இ.டி. டெயில் லைட், மஹிந்திராவின் டுவின் பீக் லோகோ மற்றும் XUV 3XO பிராண்டிங் வழங்கப்படுகிறது. இந்த காரில் முற்றிலும் புதிய டிசைன் கொண்ட அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை அளவில் பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பானரோமிக் சன்ரூஃப், 360 டிகிரி சரவுண்ட் கேமரா, ஏழு ஏர்பேக், லெவல் 2 ADAS சூட் வழங்கப்படுகிறது. இத்துடன் வென்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள், பவர்டு டிரைவர் சீட், டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர், ஆம்பியன்ட் லைட்டிங் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×