search icon
என் மலர்tooltip icon

    கார்

    மஹிந்திரா XUV300 பிஎஸ்6 2 இந்தியாவில் அறிமுகம்
    X

    மஹிந்திரா XUV300 பிஎஸ்6 2 இந்தியாவில் அறிமுகம்

    • மஹிந்திரா நிறுவனம் தனது XUV300 காரை பிஎஸ்6 2 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்தது.
    • புதிய XUV300 மாடலின் பெட்ரோல் பேஸ் வேரியண்ட் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் XUV300 மாடலை புதிய என்ஜின்களுடன் அப்டேட் செய்தது. அந்த வகையில், XUV300 மாடல் தற்போது பிஎஸ்6 2 மற்றும் RDE விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு உள்ளது. என்ஜின் அப்டேட் செய்யப்பட்டு இருப்பதை அடுத்து மஹிந்திரா நிறுவனம் XUV300 பிஎஸ்6 2 விலையை அதன் முந்தைய வெர்ஷனை விட அதிகரித்து இருக்கிறது.

    அதன்படி மஹிந்திரா XUV300 பிஎஸ்6 2 விலை ரூ. 8 லட்சத்து 41 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. புதிய மஹிந்திரா XUV300 மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் பெட்ரோல் என்ஜின் 109 ஹெச்பி பவர், 200 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    டீசல் என்ஜின் 115 ஹெச்பி பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இரு என்ஜின்களும் தற்போது பிஎஸ்6 2 மற்றும் RDE விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு உள்ளன. இந்தியாவில் ஏப்ரல் 1, 2023 முதல் புதிய புகை விதிகள் அமலுக்கு வருகின்றன.

    இந்திய சந்தையில் XUV300 அப்டேட் செய்யப்பட்டு இருப்பதை அடுத்து அதன் விலைகளும் மாறி இருக்கின்றன. மஹிந்கிரா XUV300 மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட பெட்ரோல் W4 மற்றும் W6 வேரியண்ட்களின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இவற்றின் விலை முறையே ரூ. 8 லட்சத்து 41 ஆயிரம், ரூ. 9 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.

    மஹிந்திரா XUV300 பெட்ரோல் AMT வேரியண்ட் W6 விலை தற்போது ரூ. 20 ஆயிரம் அதிகரித்து ரூ. 10 லட்சத்து 71 ஆயிரம் என மாறி இருக்கிறது. பெட்ரோல் என்ஜின் கொண்ட மற்ற வேரியண்ட்களின் விலை ரூ. 15 ஆயிரம் வரை அதிகரித்து இருக்கிறது. டீசல் என்ஜின் கொண்ட W4, W6 மற்றும் W8 வேரியண்ட்களின் விலை ரூ. 20 ஆயிரம் உயர்ந்துள்ளது. W8(O) விலை ரூ. 22 ஆயிரம் அதிகரித்து இருக்கிறது.

    Next Story
    ×