search icon
என் மலர்tooltip icon

    கார்

    ரூ. 5 லட்சம் பட்ஜெட்டில் 7 சீட்டர் கார் உருவாக்கும் மாருதி?
    X

    ரூ. 5 லட்சம் பட்ஜெட்டில் 7 சீட்டர் கார் உருவாக்கும் மாருதி?

    • இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக மாருதி சுசுகி விளங்குகிறது.
    • சமீபத்தில் தான் மாருதி சுசுகி தனது கிராண்ட் விட்டாரா CNG மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.

    இந்திய சந்தையில் குறைந்த விலை 7 சீட்டர் பிரிவில் மாருதி சுசுகி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குறைந்த விலை மாடல்களை வாங்குவோர் தேர்வு செய்வது எர்டிகா அல்லது XL6 ஆகவே இருந்து வருகிறது. இதுதவிர மாருதி சுசுகி நிறுவனம் ஈகோ மாடலை மிக குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது. எனினும், இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்ட 2010 ஆண்டு முதல் ஒரே மாதிரியான தோற்றம் கொண்டிருக்கிறது.

    அவ்வப்போது இந்த மாடலுக்கு சிறு அப்டேட்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஈகோ மாடலுக்கு பெரும் அப்டேட் கொடுக்க மாருதி சுசுகி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய ஈகோ மாடலின் வெளிப்புறம் புது டிசைன், புதிய பம்ப்பர்கள், ரிவொர்க் செய்யப்பட்ட ஹெட்லேம்ப்கள், புது கிரில் மற்றும் மேம்பட்ட டெயில் லேம்ப் டிசைன் வழங்கப்பட இருக்கிறது.

    இதுதவிர ஸ்டாண்டர்டு வீல் கவர்கள், ஃபாக் லேம்ப்கள் வழங்கப்படும். இவை தவிர ஈகோ மாடலின் ஒட்டுமொத்த தோற்றம் வேன் போன்றே காட்சியளிக்கும். ஈகோ மாடல் அதன் வேன் போன்ற தோற்றத்திற்கு பெயர் பெற்று இருக்கிறது. சமீபத்தில் மாருதி அறிமுகம் செய்த புது ஈகோ மாடலில் 1.2 லிட்டர் டூயல்ஜெட் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதே என்ஜின் டிசையர், ஸ்விஃப்ட் மற்றும் இதர மாடல்களில் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த என்ஜின் 80 ஹெச்பி பவர், 104 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. CNG மோடில் இந்த என்ஜின் 71 ஹெச்பி பவர், 95 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதே என்ஜின் புதிய தலைமுறை ஈகோ மாடலிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். புது அப்டேட்கள் கொண்ட மாருதி சுசுகி ஈகோ மாடல் இந்த ஆண்டிற்குள் அறிமுகம் செய்யப்படலாம். இதன் விலை ரூ. 5 லட்சத்து 50 ஆயிரத்தில் இருந்து துவங்கலாம்.

    Next Story
    ×