என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கார்
டெஸ்டிங்கில் சிக்கிய ஸ்விப்ட் ஹைப்ரிட்.. 35 கி.மீ. மைலேஜ் - வெளியீடு எப்போ தெரியுமா?
- புது ஸ்விப்ட் மாடலில் ஐடில் ஸ்டார்ட் / ஸ்டாப் தொழில்நுட்பம் உள்ளது.
- இந்த கார் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படம் வெளியாகி உள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் சமீபத்தில் தனது நான்காம் தலைமுறை ஸ்விப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற புதிய தலைமுறை ஸ்விப்ட் மாடல் விற்பனையிலும் அதிக யூனிட்களை பதிவு செய்து வருகிறது. இந்த கார் புதிய 1.2 லிட்டர் Z12E பெட்ரோல் எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்பட்டது.
இத்துடன் புதிய ஸ்விப்ட் மாடல் அதன் முந்தைய வெர்ஷனில் இருந்த 3 சிலிண்டர் எஞ்சினுக்கு மாற்றாக புதிய 4 சிலிண்டர் எஞ்சினுடன் கிடைக்கிறது. இதுதவிர ஸ்விப்ட் மாடலில் ஹைப்ரிட் பவர்டிரெயின் ஆப்ஷன் வழங்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. தற்போதைய ஸ்விப்ட் மாடலில் ஐடில் ஸ்டார்ட் / ஸ்டாப் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதனுடன் பெரிய பேட்டரி மூலம் ஸ்டிராங் ஹைப்ரிட் வசதி வழங்கப்படும் பட்சத்தில் இந்த கார் லிட்டருக்கு 35 கிலோமீட்டர்கள் வரையிலான மைலேஜ் வழங்கும் என்று எதிர்பார்க்கலாம். ஸ்விப்ட் ஹைப்ரிட் மாடல் பற்றிய தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வந்த நிலையில், தற்போது இந்த கார் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படம் வெளியாகி உள்ளது.
அதில் புதிய ஸ்விப்ட் ஹைப்ரிட் மாடல் எவ்வித மறைப்பும் இன்றி டெஸ்டிங் செய்யப்படுவது அம்பலமாகி இருக்கிறது. மேலும், இந்த காரின் பின்புறத்தில் ஹைப்ரிட் என்பதை உணர்த்தும் பேட்ஜ் காரின் பின்புறத்தில் இடம்பெற்று இருக்கிறது. ஹைப்ரிட் வசதியுடன் இந்த காரில் ADAS அம்சங்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது.
மாருதி சுசுகியின் புதிய ஸ்விப்ட் ஹைப்ரிட் மாடல் 2025 ஆண்டு டெல்லியில் நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்படும் என்றும் அதைத் தொடர்ந்து மார்ச் மாத வாக்கில் வெளியீட்டு நிகழ்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.