search icon
என் மலர்tooltip icon

    கார்

    இந்தியாவில் இரு கார்களுக்கான முன்பதிவை மீண்டும் துவங்கிய மெர்சிடிஸ் பென்ஸ்
    X

    இந்தியாவில் இரு கார்களுக்கான முன்பதிவை மீண்டும் துவங்கிய மெர்சிடிஸ் பென்ஸ்

    • மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இரு கார் மாடல்களுக்கான காத்திருப்பு காலம் அதிகபட்சம் பத்து மாதங்கள் வரை குறைகிறது.
    • மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் மேபேக் GLS மற்றும் AMG G63 மாடல்களுக்கு அதிக மாதங்கள் காத்திருப்பு காலம் இருந்து வந்தது.

    மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் தனது இரு டாப் எண்ட் மாடல்களின் முன்பதிவு துவங்குவதாக அறிவித்து இருக்கிறது. இரு கார்களின் உற்பத்தி கூடுதலாக அதிகரிக்கப்பட்டு இருப்பதை அடுத்து, முன்பதிவு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதல் வாரத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் வாடிக்கையாளர்கள் மட்டும் பிரத்யேகமாக கார்களை முன்பதிவு செய்ய முடியும். அதன் பின் மற்ற வாடிக்கையாளர்கள் புதிய பென்ஸ் கார்களை வாங்க முன்பதிவு செய்யலாம்.

    தற்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் CBU மாடல்களான மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் GLS 600 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் AMG G63 உள்ளிட்டவைகளுக்கு அதிக யூனிட்கள் ஒதுக்கீடு மற்றும் வினியோகத்தில் முன்னுரிமை வழங்கப்பட இருக்கிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவில் டாப் எண்ட் மாடல்களாக AMG E53 கேப்ரியோலெட், மெர்சிடிஸ் பென்ஸ் AMG G63, மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் GLS, மெர்சிடிஸ் பென்ஸ் S கிளாஸ், மெர்சிடிஸ் பென்ஸ் S கிளாஸ் மேபேக் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் EQS EV உள்ளிட்டவைகளை விற்பனை செய்து வருகிறது.

    கடந்த ஆண்டு மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் இந்த பிரிவில் 69 சதவீதம் வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்தது. கடந்த ஆண்டு அதிக வளர்ச்சியை பதிவு செய்த இந்த பிரிவில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்த ஆண்டும் அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு முழுக்க மெர்சிடிஸ் பென்ஸ் அறிமுகம் செய்யும் கார்களில் பாதிக்கும் மேற்பட்டவை இந்த பிரிவை சேர்ந்தவைகளாக இருக்கும்.

    ஒவ்வொரு மாடலுக்கு ஏற்ப இந்த வாகனங்களுக்கான காத்திருப்பு காலம் ஆறில் இருந்து அதிகபட்சம் பத்து மாதங்கள் வரை குறையும் என மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் எதிர்பார்க்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் AMG G63 மாடலுக்கான காத்திருப்பு காலம் 24 முதல் 36 மாதங்களில் இருந்து 12 முதல் 16 மாதங்களாக குறைந்து இருக்கிறது. இதே போன்று மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் GLS 600 காரின் ஒற்றை நிற வேரியணட்டுக்கான காத்திருப்பு காலம் எட்டு மாதங்களாகவும், டூயல் டோன் வேரியண்டிற்கு எட்டு முதல் பத்து மாதங்களாகவும் குறைந்து இருக்கிறது.

    "பல மாதங்களாக இந்த வாகனங்களுக்காக காத்திருக்கும் எங்களின் வாடிக்கையாளர்களுக்காக முன்பதிவை மீண்டும் பிரத்யேகமாக துவங்குகிறது. இது போன்ற டாப் எண்ட் மாடல்களை வாங்க வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் செலுத்துவதை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் மெர்சிடிஸ் பென்ஸ் குளோபல் தொகுப்பில் இருந்து புதிய மாடல்களை இந்த பிரிவில் தொடர்ந்து அறிமுகம் செய்வோம்." என மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஒ சந்தோஷ் ஐயர் தெரிவித்தார்.

    Next Story
    ×