search icon
என் மலர்tooltip icon

    கார்

    கிராஷ் டெஸ்டில் மாஸ் காட்டிய மாருதி டிசையர்
    X

    கிராஷ் டெஸ்டில் மாஸ் காட்டிய மாருதி டிசையர்

    • புதிய டிசையர் மாடல் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
    • முதல் மாருதி கார் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    மாருதி சுசுகி நிறுவனத்தின் முற்றிலும் புதிய டிசையர் மாடலின் விலை விவரங்கள் வருகிற 11 ஆம் தேதி தான் அறிவிக்கப்பட உள்ளது. எனினும், அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்பே புதிய டிசையர் மாடல் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    குளோபல் என்கேப் (GNCAP) கிராஷ் டெஸ்டில் பங்கேற்ற புதிய டிசையர் மாடல் ஐந்து நட்சத்திர புள்ளிகளை பெற்று அசத்தி இருக்கிறது. மேலும், குளோபல் என்கேப் டெஸ்டிங்கில் ஐந்து நட்சத்திர குறியீடுகளை பெற்ற முதல் மாருதி கார் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    புதிய சப்-4 மீட்டர் செடான் மாடல் பெரியவர்களுக்கான பாதுகாப்பிற்கு 34-க்கு 31.24 புள்ளிகளை பெற்றிருக்கிறது. சிறியவர்களுக்கான பாதுகாப்பிற்கு 49-க்கு 39.20 புள்ளிகளை பெற்றுள்ளது.

    டெஸ்டிங்கில் பங்கேற்ற புதிய டிசையர் மாடல் ஆறு ஏர்பேக், ஏபிஎஸ் மற்றும் இபிடி, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், சீட் பெல்ட் ரிமைன்டர் சிஸ்டம், ஸ்பீடு அலர்ட் சிஸ்டம் உள்ளிட்டவைகளை ஸ்டான்டர்டு அம்சங்களாக பெற்று இருக்கிறது.

    தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் டிசையர் மாடல் இதே டெஸ்டிங்கில் இரண்டு புள்ளிகளை மட்டுமே பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×