search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    பார்க்கவே பயங்கரமா இருக்கே.. இந்திய ரிலீசுக்கு ரெடியாகும் பேட்ரோல்..!
    X

    பார்க்கவே பயங்கரமா இருக்கே.. இந்திய ரிலீசுக்கு ரெடியாகும் பேட்ரோல்..!

    • முழுமையாக மாற்றப்பட்டு, சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இருவித எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    நிசான் நிறுவனம் முற்றிலும் புதிய பேட்ரோல் மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கார் 2026 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டு, முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட யூனிட்களாக இந்தியாவுக்கு கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் தான் பேட்ரோல் மாடல் முழுமையாக மாற்றப்பட்டு, சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    முதற்கட்டமாக இந்த மாடல் இடது-கை ஸ்டீரிங் பயன்படுத்தும் சந்தைகளிலும் மட்டும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு இருக்கிறது. சற்று தாமதமாகவே வலது-கை ஸ்டீரிங் பயன்படுத்தும் நாடுகளில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.


    2025 ஆண்டு முதல் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்று ரெனால்ட்-நிசான் திட்டம் கொண்டுள்ளன. அந்த வகையில், இந்திய சந்தையில் பேட்ரோல் மாடலை கொண்டுவருவது இந்தியாவில் நிசான் பிரான்டை சிறப்பாக நிலைநிறுத்த உதவியாக இருக்கும். ரக்கட், பாடி-ஆன்-ஃபிரேம் ரக பேட்ரோல் மாடல் எஸ்.யு.வி. பிரிவில் உறுதியான மாடலாக இருக்கிறது.

    புதிய பேட்ரோல் மாடல் சர்வதேச சந்தையில் தற்போது இருவித பெட்ரோல் வி6 எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஒன்று 3.8 லிட்டர் NA பெட்ரோல் யூனிட் மற்றொன்று டுவின் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட 3.5 லிட்டர் யூனிட் ஆகும். இரு வெர்ஷன்களில் ஒன்று இந்தியா கொண்டுவரப்படும் என்று தெரிகிறது.

    Next Story
    ×