search icon
என் மலர்tooltip icon

    கார்

    க்விட் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன்.. தேதி குறித்த ரெனால்ட்..
    X

    க்விட் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன்.. தேதி குறித்த ரெனால்ட்..

    • இரு எலெக்ட்ரிக் வாகனங்களில் ஒன்று முற்றிலும் புதிய ரெனால்ட் க்விட் EV ஆகும்.
    • சர்வதேச சந்தையில் டேசியா ஸ்ப்ரிங் EV என அழைக்கப்படலாம்.

    இந்திய சந்தையில் ஆறு புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ரெனால்ட்-நிசான் அலையன்ஸ் சார்பில் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதில் இரண்டு எலெக்ட்ரிக் வாகனங்களும் அடங்கும். தற்போது இரண்டு எலெக்ட்ரிக் வாகனங்களில் ஒன்று முற்றிலும் புதிய ரெனால்ட் க்விட் EV என்பது தெரியவந்துள்ளது.

    டேசியா டஸ்டர் மாடலின் டிசைனை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் க்விட் EV மாடல் சர்வதேச சந்தையில் டேசியா ஸ்ப்ரிங் EV என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இந்த காரின் முகப்பு பகுதியில் கிரில் மூடப்பட்டு முற்றிலும் புதிய டிசைன் கொண்ட எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.


    இத்துடன் கிரில் பகுதியின் மத்தியில் அளவில் பெரிய DC லோகோ இடம்பெற்று இருக்கிறது. இதுவே காரின் சார்ஜிங் டாக் ஆகவும் செயல்படும் என்று தெரிகிறது. வெளிப்புற தோற்றத்தில் இந்த கார் அதன் ஐ.சி. என்ஜின் வெர்ஷனை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இதன் அலாய் வீல் வித்தியாசமாகவும், ரூஃப் ரெயில் மற்றும் டோர் கிளாடிங்கில் புளூ அக்சென்ச்ட்கள் செய்யப்பட்டுள்ளன.

    இதே போன்று காரின் பின்புறத்தில் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், டுவீக் செய்யப்பட்ட பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் க்விட் எலெக்ட்ரிக் மாடலில் 26.8 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வழங்கப்படும் எலெக்ட்ரிக் மோட்டார் 43 ஹெச்.பி. பவர், 125 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இந்திய சந்தையில் புதிய க்விட் EV மாடல் பன்ச் EV, சிட்ரோயன் eC3, டியாகோ EV மற்றும் எம்.ஜி. கொமெட் EV போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என்று தெரிகிறது.

    Next Story
    ×