search icon
என் மலர்tooltip icon

    கார்

    இந்தியாவில் நெக்சான் என்ட்ரி லெவல் மாடல்கள் அறிமுகம் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?
    X

    இந்தியாவில் நெக்சான் என்ட்ரி லெவல் மாடல்கள் அறிமுகம் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

    • மேனுவல் வெர்ஷன் விலை ரூ. 31 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது.
    • ஸ்மார்ட் பிளஸ் S வேரியண்டின் விலை ரூ. 41 ஆயிரம் குறைக்கப்பட்டுள்ளது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் காரின் புதிய என்ட்ரி லெவல் வேரியண்ட்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அதன்படி இந்திய சந்தையில் டாடா நெக்சான் மாடலின் விலை ரூ. 7 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இதன் டீசல் வெர்ஷன்களின் விலை ரூ. 9 லட்சத்து 99 ஆயிரம் என துவங்குகிறது.

    டாடா நெக்சான் மாடலின் பெட்ரோல் வெர்ஷன் முற்றிலும் புதிய ஸ்மார்ட் (O) வேரியண்டிலும், டீசல் வெர்ஷன் ஸ்மார்ட் பிளஸ் வேரியண்டிலும் கிடைக்கின்றன. முன்னதாக டாடா நெக்சான் மாடலின் என்ட்ரி வேரியண்ட் ஸ்மார்ட் என்றே அழைக்கப்பட்டது. டீசல் என்ஜின் மிட் ரேஞ்ச் மாடல்களில் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது.


    புதிய ஸ்மார்ட் (O) வேரியண்ட் விலை ஸ்மார்ட் வேரியண்டை விட ரூ. 16 ஆயிரம் வரை விலை குறைவு ஆகும். டீசல் வெர்ஷனில் ஸ்மார்ட் பிளஸ் மாடலின் விலை ரூ. 1.2 லட்சம் குறைக்கப்பட்டு தற்போது ரூ. 9 லட்சத்து 99 ஆயிரத்தில் இருந்தே கிடைக்கிறது. நெக்சான் பியூர் டீசல் மாடலின் விலை ரூ. 11 லட்சத்து 10 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    டாடா நெக்சான் டீசல் என்ட்ரி லெவல் வேரியண்டில் 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, நான்கு ஸ்பீக்கர்கள், ரிவர்ஸ் கேமரா, ஷார்க் ஃபின் ஆன்டெனா, பல்வேறு வசதிகளை கொண்ட ஸ்டீரிங் வீல், பவர் விண்டோ, எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட ORVMகள் வழங்கப்பட்டுள்ளன.

    ஸ்மார்ட் பிளஸ் வேரியண்ட்களில் ஆட்டோ ஹெட்லேம்ப்கள், எலெக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் வாய்ஸ் ஆக்டிவேஷன், ரெயின் சென்சிங் வைப்பர்கள் மற்றும் ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. நெக்சான் ஸ்மார்ட் பிளஸ் வேரியண்ட் மேனுவல் வெர்ஷன் விலை ரூ. 31 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக இந்த வேரியண்ட் விலை ரூ. 9.2 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. தற்போது இதன் விலை ரூ. 8.89 லட்சம் என மாறி இருக்கிறது. இதில் ரிவர்ஸ் கேமரா வசதியும் வழங்கப்பட்டுள்ளது. நெக்சான் ஸ்மார்ட் பிளஸ் S வேரியண்டின் விலை ரூ. 41 ஆயிரம் குறைக்கப்பட்டு தற்போது ரூ. 9.39 லட்சம் என மாறியுள்ளது.

    Next Story
    ×